எம் உறவுகளின் நினைவாக லண்டனில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிகள்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
எம் உறவுகளின் நினைவாக லண்டனில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிகள்
93Shares

நாகேஸ்வரா விளையாட்டு கழகம் சார்பில் வருகிற 19ம் திகதி லண்டனில் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

கடற்கரும்புலி மேஐர் பதுமனினதும், நாகர்கோவில் பாடசாலை கோர குண்டுவீச்சில் பலியாகிய அனைத்து உறவுகளின் நினைவாகவும் இந்த போட்டிகள் நடாத்தப்படவுள்ளது.

வருகிற 19ம் திகதி வடகிழக்கு லண்டன் நகரமான Walthamstow, E17 3EF-வின், Ymca 642 மைதானத்தில் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை போட்டிகள் நடைபெறவுள்ளதால், மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உங்களுடைய நிகழ்வுகளுக்கும் ஊடக அனுசரணையை இலவசமாக பெற்றுக்கொள்ள pr@lankasri.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments