ஸ்குவாஷ் எப்படி விளையாட வேண்டும்? சொல்லிக் கொடுத்த தீபிகா பல்லிகல்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
ஸ்குவாஷ் எப்படி விளையாட வேண்டும்? சொல்லிக் கொடுத்த தீபிகா பல்லிகல்
101Shares

சென்னையில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலும் மாணவ, மாணவிகளிடையே விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

P&G Shiksha நிறுவனம் ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 450 பள்ளிகளின் மூலம் 8 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் கல்விக்கு உதவியுள்ளது.

தற்போது 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'Shiksha Superheroes' என்ற பெயரில் தனது பணியை தொடர முனைப்பு காட்டி வருகிறது.

இதற்காக சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பள்ளி ஒன்றிற்கு வந்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலும் மாணவ, மாணவிகளை சந்தித்து விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி கூறினர்.

அங்கு மாணவிகளுடன் நேரத்தை செலவிட்ட தீபிகா பல்லிகல், மாணவிகளுக்கு ஸ்குவாஷ் விளையாட கற்றுக் கொடுத்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments