விஜய் மல்லையாவின் பங்களா சீக்ரெட்! மனம் திறந்த கிறிஸ் கெய்ல்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
விஜய் மல்லையாவின் பங்களா சீக்ரெட்! மனம் திறந்த கிறிஸ் கெய்ல்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கோவா பங்களாவில் 5 நாட்கள் தங்கியது குறித்து தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

‘சிக்ஸ் மிசின்: ஐ டோண்ட் லைக் கிரிக்கெட்.. ஐ லவ் இட்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகத்தை கிறிஸ் கெய்ல் எழுதியுள்ளார், இந்த புத்தகம் கடந்த 2 ஆம் திகதி வெளியானது.

பல சுவாரசியங்கள் நிறைந்துள்ள இந்த புத்தகத்தில் ஒரு பகுதியாக, தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கோவா பங்களாவில் 5 நாட்கள் தங்கியது குறித்தும், அங்கு தனக்கு கிடைத்த மரியாதை குறித்தும் எழுதியுள்ளார்.

கடந்த ஐபிஎல் போட்டியின் போது ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினேன், அந்த சமயத்தில் 2 போட்டிகளுக்கு நடுவே 5 நாட்கள் இடைவெளி இருந்தது, அப்போது ஆர்சிபி அணியின் மேலாளர் ஜார்ஜ் அவினாஷ் மூலமாக விஜய் மல்லையாவின் சொகுசு பங்களா பற்றி கேள்விப்பட்டேன்.

சக வீரர்கள் யாருமின்றி தனி விமானத்தின் மூலம் கோவாவுக்கு பயணித்தேன், கோவாவில் தரையிறங்கியதும், ஒரு ஸ்வீட்டான கார் என்னை, கான்டோலிம் பகுதிக்கு அழைத்து சென்றது.

அங்கிருந்த பங்களாக ஹொட்டல்களை விடவும் பெரியது, ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் பங்களா போன்று இருந்தது, கான்கிரீட்டாலும், கண்ணாடியாலும் கட்டப்பட்டுள்ள இதுபோன்ற பங்களாவை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

ஒட்டுமொத்த பங்களாவையும் நான் சுற்றிபார்க்கும்போது, 2 பட்லர்கள் என்னுடன் வந்தனர், அப்போது ஒரு அரசனைப்போன்று உணர்ந்தேன்.

நீச்சல் குளங்களில் உற்சாகமாக குளித்தேன், ஆசை தீர கிங் பிஷர் அருந்தினேன், நான் விரும்பிய உணவுகளை தயாரித்து கொடுத்தனர்,

கேரேஜில் அதிகமான கார்கள் இருந்தன, ஆனால் அங்கிருந்த பெரிய பைக், 3 சக்கர ஹார்லி டேவிட்சன் பைக் தான் மிகவும் கவர்ந்தது.

அதே நேரத்தில் அந்த பைக்கை விஜய் மல்லையா எப்படி வாங்கினார் என்கிற பின்னணியும் எனக்கு தெரியவந்தது. ஒருமுறை அமெரிக்காவில் மல்லையா சென்று கொண்டிருந்த போது, ஒருவர் இந்த பைக்கை ஓட்டி வந்துள்ளார்.

மல்லையாவுக்கு அந்த பைக் பிடித்து விட்டது. அவர் எதை விரும்பினாலும், உடனே வாங்கி விடுவார். அதே போல அந்த நபரிடம் பைக்கை விலை கேட்டுள்ளார்.

அந்த நபரும் வாய்க்கு வந்த ஒரு பெரிய விலையை கூறியிருக்கிறார், மல்லையா வாங்க மாட்டார் என நினைத்து. ஆனால், அடுத்த நிமிடமே அந்த நபர் சொன்ன விலையை டாலரில் எண்ணி கொடுத்து பைக்கை வாங்கி விட்டாராம்.

அமெரிக்காவிலிருந்து கப்பலில் இந்தியா வந்திறங்கிய பைக், கோவாவில் தஞ்சமடைந்து விட்டது. அந்த பைக் மீது ஏறி உட்கார்ந்தேன். நான் அதுவரை பைக்கை ஓட்டியதே கிடையாது.

3 சக்கர பைக் பார்த்ததே இல்லை. பைக்கை எப்படி ஓட்ட வேண்டுமென பட்லர் ஒருவர் சொல்லி கொடுத்தார். அதன்படி, பைக்கை ஸ்டார்ட் செய்து, வில்லாவில் உள்ள சாலையில் ஓட்டினேன்.

அந்த சாலை ரேஸ் நடக்கும் சாலையை போல பளபளவென இருந்தது. டெர்மினேட்டர் படத்தில் அர்னால்ட் பைக் ஓட்டும் பீலிங்கை உணர்ந்தேன். சட்டை பட்டன் கழன்று திறந்திருச்சு, சன் கிளாஸ் இறங்கிருச்சு. அப்படி ஒரு வேகம்.

அந்த பங்களாவில் இருந்த 5 நாட்களும் மிக அருமையான வாழ்க்கையாக இருந்தது, அங்கிருந்து வரவே மனமில்லாமல் இருந்தது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments