சுரேஷ் ரெய்னாவுக்கு கிடைக்கப் போகும் ’ப்ரமோஷன்’

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
சுரேஷ் ரெய்னாவுக்கு கிடைக்கப் போகும் ’ப்ரமோஷன்’

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா விரைவில் தந்தையாகப் போகிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரெய்னா, தனது சிறு வயது தோழியான பிரியங்கா சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கப் போவதாக ரெய்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி ஹாலந்தில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவரின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள ரெய்னாவின் தாயார் அங்கு சென்றுள்ளார்.

ரெய்னா தற்போது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ரெய்னாவின் குஜராத் அணி, டோனியின் புனே அணியை எதிர்கொள்கிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments