மெக்ஸிகோ கடற்கரையில் புதிய வகை அலகு திமிங்கலங்கள் கண்டுபிடிப்பு..!!

Report Print Gokulan Gokulan in ஏனையவை
122Shares

மெக்ஸிகோ கடற்கரையில் ஒரு அரிய வகை திமிங்கலத்தைத் தேடும் கடல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பதிலாக ஒரு புதிய இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு அரிய திமிங்கலத்தைத் தேடும் ஆராய்ச்சியாளர்கள், அதற்கு பதிலாக ஒரு புதிய வகை பீக் திமிங்கலம் என்று அவர்கள் நம்புவதைக் கண்டதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தொலைதூர மெக்ஸிகன் சான் பெனிட்டோ தீவுகளுக்கு அப்பால், நவம்பர் 17 அன்று திமிங்கலங்களின் ஒரு கூட்டத்தை சந்தித்தபோது அவர்கள் கண்டுபிடித்ததை ஆராய்ச்சியாளர்கள் முதலில் உணரவில்லை.

பெர்ரின் அலகு திமிங்கலத்தைத் (Perrin's beaked whale) தேடுவதற்காக விஞ்ஞானக் குழு Sea Shepherd Conservation societyயுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது இறந்த மாதிரிகள் கடற்கரைகளில் கண்டுபிக்கப்பட்டபோது தான் அவரைப் பற்றி தெரிய வந்துள்ளன.

அவர்கள் கண்டுபிடித்தது ஒரு புதிய வகை அலகு உடைய திமிங்கலம் (beaked whale), இது ஐந்து மீட்டர் நீளமுள்ள மற்ற திமிங்கலங்களை விட சிறியது, டால்பின் போன்ற முனகல்கள் கொண்டது மற்றும் தனித்துவமானது.

NOAA-ன் மூத்த மீன்வள விஞ்ஞானி டாக்டர் ஜே பார்லோ, அவர்கள் பெர்ரின் "நாங்கள் புதிதாக ஒன்றைக் கண்டோம், இந்த பகுதியில் எதிர்பார்க்கப்படாத ஒன்று, பொருந்தாத ஒன்று, தோற்றத்திலும் அல்லது ஒலியிலும் இதுபோன்று எதுவும் இருப்பதாக அறியப்பட்டாக தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

இவ்வளவு பெரிய கடல் உயிரினம் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். கடலில் இன்னும் நிறைய மர்மங்களும் அறியப்படாத பல உயிரினங்கள் உள்ளன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்