முதலைகளுக்கு பொதுவாக நீரிலேயே பலம் அதிகம் என்பார்கள்.
அதேபோன்று நீரில் இருக்கும்போது மிகவும் வேகமாக இடம்பெயரும் ஆற்றலும் காணப்படுகின்றது.
அத்துடன் நீருக்கு வெளியே பொதுவாக சோம்பல் தன்மை உடையதாகவே அவை காணப்படும்.
ஆனால் முதன் முறையாக நீருக்கு வெளியிரும் வேகமாக இடம்பெயரும் ஆற்றல் முதலைகளுக்கு உண்டு என்பது ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
அதாவது நாய் அல்லது குதிரையைப் போன்று தாவி தாவி இடம்பெயரும் ஆற்றலும் முதலைகளுக்கு உண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலுள்ள நன்நீர் முதலைகளுக்கு இந்த ஆற்றல் இருப்பதாக நம்பப்பட்டுவந்தது.
இப்படியான நிலையிலேயே அனைத்து முதலைகளும் வேகமாக இடம்பெயரும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக 15 இனங்களைச் சேர்ந்த 42 முதலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.