சிங்கம் சிங்கிளாதான் வரும்... இது உண்மைதானா?

Report Print Abisha in ஏனையவை
358Shares

"சிங்கம் சிங்கிளாதான் வரும் பன்றிகள்தான் கூட்டமா வரும்" என்று திரைப்படங்களில் நாம் கேட்கும் வசனம் சிங்கத்தின் வாழ்வை ஒத்ததா? என்பதை பார்க்கலாம்

பொதுவாக அடிக்கடி திரைப்படங்களில், வீரத்தை அடையாளப்படுத்த சிங்கங்கள் குறித்து அதிகம் பேசுவது உண்டு. அதில், குறிப்பாக ஒரு வசனம் என்பது சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் பன்றிகள்தான் கூட்டமாக வரும் என்று அடிக்கடி ஹீரோக்கள் பேசுவர்.

உண்மையில், இது சிங்கங்களின் வாழ்க்கையில் சாத்தியமா? என்றால் முற்றில் மறுக்கப்படும் செய்திதான் அது. உண்மையில் சிங்கம் ஒரு கூட்டமாகத்தான் வாழும். அதில், ஒரு ராஜாவான ஆண் சிங்கமும், மற்றவை அனைத்தும் பெண் சிங்கமுமாகவே இருக்கும்.

வேட்டைக்கு செல்லும்போதும், பெண் சிங்கங்கள்தான் அதிகம் வேட்டையாடுகின்றன. பெண் சிங்கங்களும் தனித்து வேட்டைக்கு செல்வதில்லை கூட்டமாகவே செல்லும்.

ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்வதில்லை. அவை பெண் சிங்கங்கள் வேட்டையாடி கொண்டு வரும் உணவை முதலில் சாப்பிடும், அதன்பின் அந்த கூட்டத்தில் இருக்கும் அனைத்து பெண்சிங்கங்களும் சாப்பிடும். மிச்சமீதியை அப்படியே நரிகள் போன்ற விலங்குகளுக்கு விட்டு செல்கின்றன.

ஆண் சிங்கத்தின் பிராதான பணி பெண் சிங்கங்களை பாதுகாப்பது மற்றும் தனது எல்லையை காப்பதுதான்.

சிங்கங்களின் தனித்து திரியும் காலம் அதன் முதிர்வு காலம்தான். அந்நேரங்களில் தலமை பொறுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அதன் எல்லைக்குள் அகதியாக வாழும். அப்போது தனித்து வேட்டையாடவும் திறனின்றி சுற்றித்திரியும். மேலும், அந்நேரங்களில் பல சிங்கங்கள் உணவின்றி எளிதில் உயிரிழந்துவிடும்.

பலரும் உண்மையை அறியாமல், சிங்கம் சிங்கிளாகதான் வரும் என்று தன்னை அடையாளப்படுத்தி கூறுவதும் வேடிக்கையான ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்