சுமார் 149 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அதிகாலை அபூர்வ சந்திர கிரகணம் வானில் தென்பட்டுள்ளது.
இலங்கையர்கள் மட்டுமின்றி இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, தென் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல இடங்களை சேர்ந்த மக்களும் வெற்றுக் கண்களால் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்திய, இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.13 மணிக்கு தொடங்கி, 1.31 மணிக்கு உச்சத்தை அடைந்தது. இதையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் சந்திர கிரகணம் நிறைவு பெற்றது.
மேலும் இதற்கடுத்து வரும் 2021ஆம் ஆண்டில் முழு சந்திர கிரகணம் தென்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்திரகிரணத்தின் போது இலங்கையில் தென்பட்ட இந்த அபூர்வ காட்சியை கண்டு மகிழ கீழ் காணும் வீடியோவை காண்க.