மிகவும் அரிய வகை பறவை ஒன்று கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனையவை

உலகிலேயே மிகவும் அரிதாகக் காணப்படும் பறவை இனம் ஒன்று பிரேஸிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்து.

இது ஒரு பெண் பறவையாக காணப்படுகின்றது.

இப் பறவையானது மத்திய அளவுடையதாகவும், நீண்ட வாலைக் கொண்டதாகவும் இருக்கின்றது.

சுமார் ஒரு மாதகால தேடலிற்கு பின்னரே இப் பறவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 1830 ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலேயே இறுதியாக காணப்பட்ட இப் பறவைகள் தற்போது மிகவும் அருகிவிட்டன.

இதனால் கிழக்கு பிரேஸிலின் சிறிய பகுதியில் மாத்திரம் தற்போது வாழ்ந்து வருகின்றன.

இப் பறவை தொடர்பான தகவல்களை American Bird Conservancy அமைப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் இப் பறவை இனத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers