இயற்கை எழிலின் சொர்க்கபூமி எனப்படும் மாத்தேரானின் அழகிய புகைப்படம்

Report Print Jayapradha in ஏனையவை

மும்பையிலிருந்து 90 கி.மீட்டர் பயணித்தால் மாத்தேரான் என்ற குளிர்பிரதேசத்திற்கு செல்லலாம் . இது ஒரு அழகான மலைப்பகுதி. மாத்தேரான் கடல் பகுதியிலிருந்து 2625 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

எல்லா மலைவாசஸ்தலங்களையும் போன்றே இந்த மாத்தேரான் மலைவாசஸ்தலமும் பல மலைக்காட்சி தளங்களை கொண்டுள்ளது. இந்த மலைக்காட்சி தளங்களிலிருந்து மயக்க வைக்கும் பள்ளத்தாக்கு காட்சிகளை காணமுடிகிறது.

இங்குள்ள 38 ம.காட்சித்தளங்களில் பனோரமா பாயிண்ட் எனும் தளம் 360° கோணத்தில் நாலா புறமும் பார்த்து ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

இங்கிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு போன்ற காட்சிகளைக்காணும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அந்த அளவுக்கு பரவச சிலிர்ப்பை அக்காட்சிகள் அளிக்கின்றன.

மாத்தேரானின் ஹார்ட் பாயிண்ட் எனும் காட்சி தளத்திலிருந்து மும்பை நகரின் பல வண்ண விளக்குகளின் ஜொலிப்பை இரவில் பார்க்க முடிகிறது. பிரபால் கோட்டை எனப்படும் புராதன வரலாற்று கோட்டையை லூயிசா பாயிண்ட்' எனும் இடத்திலிருந்து அருமையாக பார்க்கலாம்.

மாத்தோரானின் சார்லோட் ஏரிப்பகுதி ஏகாந்தமாக ஓய்வெடுப்பதற்கு உகந்த தலமாகும். இங்கு பயணிகள் பறவை வேடிக்கை, கரையோர நடைப்பயணம் போன்றவற்றில் ஈடுபடலாம். குழந்தைகளுடன் பூங்காவில் விளையாடி மகிழவோ அல்லது அன்புக்குரியவருடன் நடக்கவோ ஏற்ற இயற்கைச்சூழல் இங்கு காணப்படுகிறது.

மலையின் நடுபகுதியில் அழகான பீடபூமிக்கு நம்மை அழைத்து செல்கிறது. இதை சுற்றியுள்ள பசுமை நம்மை மயக்கதில் ஆழ்த்தும். மேலும் மலையின் நடுப்பகுதியில் ஒரு கிராம தேவதை கோவில் இருக்கிறது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers