மிகவும் தொன்மை வாய்ந்த ஆயுதம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனையவை

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் பாவிக்கப்பட்டிருந்த ஆயுதம் என கருதப்படும் பொருள் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது வட அமெரிக்க பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெக்ஸாசிலுள்ள A&M பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

இவ் ஆயுதமானது சுமார் 15,500 வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

இதன் நீளம் 3 தொடக்கம் 4 அங்குல அளவுடையதாக இருக்கின்றது எனவும் இதே போன்றதொரு ஆயுதம் இதற்கு முன்னர் குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers