ஆடுகளின் வியக்க வைக்கும் ஆற்றலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

ஆடுகள் மனித முகபாவனைகளை அறிந்துகொள்ளும் ஆற்றலுடையவை.

மேலும் இவை அதிகம் சந்தோசமான மக்களுடனேயே பழக விரும்புகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

இச் செய்தி உண்மையில் ஆடுகளை வளர்ப்போருக்கு ஒரு ஆச்சரியமான விடயமாகவே இருக்கும்.

அத்துடன் இதுவே ஆடுகள் எவ்வாறு மனித உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றன என்பதற்கான விஞ்ஞான ரீதியிலான சாட்சி.

முன்னைய ஆய்வொன்று நாய்களைப் போன்றே ஆடுகளும் அன்பானவை, புத்திசாலியானவை என்பதைக் காட்டியிருந்தது.

அவ் ஆய்வின் தொடர்ச்சியாகவே இப் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கென McElligott மற்றும் அவரது குழு சரணாலயத்திலிருந்து 20 ஆடுகளைப் பெற்று அவற்றுக்கு சோடி மனித முகங்களின் புகைப்படத்தைக் காட்டியிருந்தனர்.

இரண்டு புகைப்படங்களும் ஒரே நபருக்குரியவையாகவும், முன்னர் ஆடுகளுக்கு அறிமுகமில்லாத நபரின் புகைப்படமாகவும் இருந்தன.

இதில் ஒரு புகைப்படம் அவரின் சந்தோசமான, உறுதியான முகத்தைக் கொண்டிருந்தது, மற்றையது சோகமான, எதிர்மறையான முகத்தைக் கொண்டிருந்தது.

இதன்போதே ஆடுகள் அதிகம் சந்தோசமான முகங்களுடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்தக் காணப்பட்டிருக்கின்றது.

இவை அப் புகைப்படங்களை நாடியும் சென்றுள்ளன.

இது தொடர்பாக ஆய்வாளர்கள் கருத்துத்தெரிவிக்கையில், இவ் ஆய்வின் மூலம் ஆடுகள் மனித உணர்வுகளை பிரித்தறியக்கூடியன என்பதற்கு அப்பால் அவை அதிகம் சந்தோசமான நபர்களையே விரும்புகின்றன என்பதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers