சீனாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் மர்ம நகரம்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

பண்டையகால சுவர் கொண்ட குடியிருப்பு ஒன்று தற்போது இது வட சீனா தொல்லியலாளர்களைப் புரட்டிப் போட்டிருக்கின்றது.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இவ்விடமானது முன்னொருகாலத்தில் பரபரப்பான தலைநகரமாக விளங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விடத்தைச்சூழ கிட்டத்தட்ட 4,300 வருடங்கள் பழமைவாய்ந்த பிரமிட்டுக்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இது ஒருகாலத்தில் தற்போதைய சீனாவின் அரசியல் பொருளாதார மையமாக விளங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இப்பிரமிட்டுக்கள் கண்கள் மற்றும் மனித முகங்கள் போன்ற உருவங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இக் கட்டடத்தின் மேல் பகுதிகளில் உயர்சாதி மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களும், 230 அடி உயரமான இப் பிரமிட்டுக்களின் சில பகுதிகள் இரும்புத் தொழில் வேலைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்