ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சிறிய குதிரையின் படிமம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனையவை

Siberia நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அழிவடைந்து போன கற்காலத்துக்குரிய குதிரைக் குட்டியொன்றை நல்ல நிலையில் மீட்டெடுத்துள்ளனர்.

இது Siberia இல் உள்ள பனிக்கட்டிப் படைகளிலிருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இக் குதிரையானது முறையாக பாதுகாக்கப்பட்டிருந்த அதே நேரம் படுக்கையில் இருப்பது போன்று இருந்துள்ளது.

ஆனாலும் இது பல வருடங்களுக்கு முன் இறந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 30,000 தொடக்கம் 40,000 வருடங்களுக்கிடையில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது அந்நாட்டு உள்ளூர் வாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் யப்பான் மற்றும் ரஷ்யா விஞ்ஞானிகளால் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வராலாற்றுக்கு முற்பட்டதும் அதிக வயதுடையதுமான குதிரையின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதன்முறை.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்