மூளையின் முக்கிய செயற்பாடுகள் ஆண், பெண்களுக்கு இடையில் வேறுபடுமா? புதிருக்கு விடை கிடைத்தது

Report Print Givitharan Givitharan in ஏனையவை

முன்னர் விவாதிக்கப்பட்டிருந்தது போல மூளையின் 'Executive Functions' என அறியப்படும் முக்கிய மூளைச் செயற்பாடுகள் ஒருவரின் பாலினத்தில் தங்கியிருப்பதில்லை என்பதை புதிய ஆய்வொன்று எடுத்துக்காட்டியுள்ளது.

முளையின் Executive Functions என்பது சிரத்தை, தர்க்க அறிவு, செயற்படும் நினைவுத்திறன், தீர்மானம் எடுத்தல், கணத்தாக்கக் கட்டுப்பாடு மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணல் போன்ற மூளைச் செயற்பாடுகளை உள்ளடக்கியது.

இவ் Executive Functions ஆனவை நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளைக் கையாள்வதையும், எதிர்கால நிகழ்வுகளைத் திட்டமிடுவதையும் பாதிக்கின்றது. இவை நாம் எப்படி நடந்துகொள்கின்றோம் மற்றும் நாம் எவ்வாறு உலகத்துடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்துகின்றோம் என்பதைத் தீர்மானிக்கின்றது.

இவை நன்றாக விருத்திசெய்யப்பட்டிருந்தால் அவை வெற்றிகரமான சமூக, கல்வியியல் சார்ந்த மற்றும் தொழில்முறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் எனப்படுகிறது.

இது குறைவாக விருத்திசெய்யப்பட்டிருந்தால் அல்லது குழப்பம் விளைவிக்கப்பட்டிருந்தால் அது கவனக் குறைவு அதியுயரியக்கக் கோளாறு (ADHD) மற்றும் மனச்சிதைவு போன்றவற்றிற்குக் காரணமாகலாம்.

தற்போது மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வின் நோக்கம் பாலினத்திற்கிடையில் மனநிலை ஆரோக்கியப் பிரச்சனைகள், ஆபத்து, முன்னெடுத்துச் செல்லும் வீதம் மற்றும் நிலைமைகளின் தீவிரம் போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவா என அறிவதாகும்.

ஒப்பீட்டளவில் ஆண்கள் சிறு வயதிலேயே மனச்சிதைவு நோய்க்கு ஆளாகக் கூடியவர்கள். உதாரணத்திற்கு ADHD ஆனது பெண்களை விட ஆண்களிலேயே அதிகம் ஏற்படுகிறது.

இது தொடர்பான ஆய்வு மனிதர் மற்றும் விலங்குகளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போதே பாலினமானது Executive Function மற்றும் அறிவியல் சார்ந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பிரதான காரணியல்ல என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மேலும் அவர்கள் அநேகமாக வேறு காரணிகள் இதில் செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்கின்றனர். முன்னைய ஆய்வில், நாம் வெளிக்காட்டப்படும் சூழல் அழுத்தங்கள் இதனைப் பாதிக்கலாம் என சொல்லப்பட்டிருந்தமை இவ் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்