அதிகாரியை ஓங்கி அறைந்த பெண்! எதற்காக தெரியுமா?

Report Print Shivatha in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் குடியுரிமைத் துறை அதிகாரியை இங்கிலாந்து பெண் ஒருவர் கன்னத்தில் அறையும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆஜ் இ டக்காடாஸ் (Auj e Taqaddas) என்ற பெண் 160 நாள் சுற்றுலா விசாவில் இந்தோனேஷியா வந்துள்ளார். பாலி தீவுகளில் தங்கியிருந்த அந்தப் பெண் விசாவில் குறிப்பிட்டிருந்த நாட்கள் முடிந்த பின்னரும் பாலி தீவிலேயே தங்கியிருந்தார்.

இதையடுத்து அனுமதியின்றி கூடுதல் நாட்கள் இருந்ததற்காக அந்தப் பெண்ணுக்கு இந்தோனேஷிய குடியுரிமைத்துறை அதிகாரிகள் 4 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தனர்.

இதனை செலுத்த மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டக்காடாஸ் ஒரு கட்டத்தில் குடியுரிமைத்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்ததால் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...