சூறாவளி போல் தெரிந்த காட்சியால் குழப்பமடைந்த வாகன ஓட்டிகள்: பின்னர் தெரியவந்த உண்மை

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
0Shares

அர்ஜெண்டினாவில் சாலையில் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வாகன ஓட்டிகள், தொலைவில் சூறாவளி போல் தோன்றிய ஒரு காட்சியைக் கண்டு குழப்பமடைந்தனர்.

பார்ப்பதற்கு அது சூறாவளி போல் தோன்றினாலும், அருகே செல்லச் செல்ல, அது வித்தியாசமாக காணப்பட்டிருக்கிறது.

குழப்பத்துடனேயே வாகனம் ஓட்டிய சாரதிகள் அருகே செல்லும்போதுதான் தெரியவந்தது, அது சூறாவளி அல்ல, சூறாவளி போல் திரண்டிருந்த கொசுக்களின் கூட்டம் என்று. ஆனால், அது குறித்துக் கவலைப்படவேண்டாம் என்று கூறியுள்ளார், அர்ஜெண்டினா ஆய்வக அறிவியலாளர் ஒருவர்.

பெருமழையால் வெள்ளம் அதிக அளவில் தேங்கியதையடுத்து கொசுக்கள் அங்கு முட்டையிட்டதால் இந்த நிகழ்வு நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பார்ப்பதற்கு பயங்கரமாக அது காட்சியளித்தாலும், அவற்றால் மனிதர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ள அவர், அவற்றை அழிப்பதற்காக எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றும், அவை 15 நாட்களில் தானாகவே உயிரிழக்கத் தொடங்கிவிடும் என்று கூறியுள்ளார் அவர்.

அதே நேரத்தில், அவற்றால் பண்ணை வேலைகள் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார் அவர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்