தீப்பற்றி எரிந்த கட்டிடம்... பதட்டத்தில் 4 குழந்தைகளையும் 3வது மாடியிலிருந்து கீழே போட்ட தாய்: திகிலூட்டும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
0Shares

துருக்கியில் கட்டிட தீ விபத்தில் சிக்கிக்கொண்ட தாய், அந்த பதட்டமான சூழலிலும் திறமையாக தனது 4 குழந்தைகளையும் சிறு காயமில்லாமல் காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

இஸ்தான்புல் நகரின் எசென்லர் மாவட்டத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

கட்டிடத்தின் 3வது தளத்தில் தாய் தனது 4 குழந்தைகளுடன் சிக்கியுள்ளார். அவர்கள் வீட்டிலும் தீ பரவி ஜன்னலிருந்து கரும் புகை வெளியே வர தொடங்கியுள்ளது.

அந்த பதட்டமான சூழலிலும் அப்பெண், தனது நான்கு குழந்தைகளையும் காப்பாற்ற ஒவ்வொன்றாக ஜன்னல் வழியாக கீழே போட்டுள்ளார்.

குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு கட்டிடத்தின் கீழே கூடிய மக்கள், போர்வைகளை விரித்து பிடித்து குழந்தைகளை காப்பாற்ற தயாராகியுள்ளனர்.

நான்கு குழந்தைகளையும் பத்திரமாக போர்வைகளால் பிடித்த மக்கள், நால்வரையும் உடனே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதன் பின் மீட்கப்பட்ட தாய், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களும் காயமடையவில்லை என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களும் அந்த கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக கருதப்படுகிறது, மேலும் சம்பவியடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்