'அது வதந்தி., இந்தியா தயாரித்த தடுப்புமருத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை' தென் ஆபிரிக்கா விளக்கம்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துகளை திரும்ப ஒப்படைக்கப்போவதாக வெளியான தகவலை தென் ஆபிரிக்கா மறுத்துள்ளது.

அக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உள்ளூரில் 'Covishield' என்ற பெயரில் தயாரித்துவருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்துகளிலிருந்து 1 மில்லயன் டோஸ்களை தென் ஆபிரிக்கா வாங்கி பரிசோதனை செய்தது.

ஆனால், தென்னாபிரிக்க வகைக் கொரோனா வைரசுக்கு எதிராக இம்மருந்து குறைந்த பலனையே அளிப்பதாகக் கூறி அத்தடுப்பூசிகளை செலுத்துவதை தென் ஆபிரிக்கா நிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து இந்த மருந்துகளை தென் ஆபிரிக்கா இந்தியாவிடமே திரும்பி ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில், வெளியான இந்த தகவல் ஒரு வதந்தி என்றும், இந்த தடுப்பூசிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவில்லை என்றும் தென் ஆபிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஸ்வேலி கிஸி தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், தென் ஆபிரிக்கா இந்த ஒரு மில்லியன் இந்திய தயாரிப்பு கோவிட் -19 தடுப்பூசிகளை மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்