கேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு தாய் கொடுத்த இன்ப அதிர்ச்சி! கண்கலங்கவைக்கும் நெகிழ்ச்சி வீடியோ

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

கேன்சரால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தானும் மொட்டை அடித்துக்கொண்டு தாயின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும். இதன் காரணமாக, அவர்களுக்கு உடலில் எல்லா பகுதியிலும் முடிகள் கொட்டும். இதனால், ஒரு கட்டத்தில் அவர்கள் தலையை முழுவதுமாகக் மொட்டையடிக்க வேண்டியிருக்கும்.

அது நோயினால் ஏற்பட்ட துன்பத்தை விட, அவர்களுக்கு பல மடங்கு மன உளைச்சலையும் வேதனையும் கொடுக்கும். இப்படி ஒரு நிலையில், அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கத்தையும் அளிக்கமுடியும்.

இவ்வாறு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நேர்மறையான ஆற்றலையும் நம்பிக்கையையும் கொடுக்கும், ஒரு கண்கலங்கவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு தாய், கேன்சரால் பாதிக்கப்பட்ட தன் மகளுக்கு மொட்டை அடித்துக்கொண்டு இருக்கிறார். இருவரும் மகிழ்ச்சியுடன் அதனை பதிவு செய்துகொண்டிருக்கின்றனர்.

அப்போது, தன் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சற்றும் தயங்காமல் தனது தலையையும் மொட்டையடிக்கத் தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் கண்கலங்கிய நிலையில் நின்ற இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

https://twitter.com/i/status/1353926076947431424

ட்விட்டரில் இந்த வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஒரு அலுவலகத்தில் சக ஊழியரின் கேன்சரால் பாதிக்கப்பட்ட மகனுக்கு மொட்டையடிக்கும்பொது, அவருடன் பணியாற்றும் அனைத்து சகாக்களும் மொட்டையடித்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சி அடையச் செய்தது. இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. அவை அனைத்தும் நோய்க்கு எதிராகப் போராடும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையை கூட்டுகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்