நாட்கணக்கில் மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாய்! கோடிக்கணக்கானோரின் மனதை கொள்ளைகொண்ட நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
213Shares

துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் உரிமையாளரை சந்திக்க நாய் ஒன்று மருத்துவமனை வாசலில் பல நாட்களாக காத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் 68 வயதான செமல் செண்டுர்க். இவர் கடந்த 9 ஆண்டுகளாக Boncuk என்ற ஒரு வெள்ளை நிற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 14-ஆம் திகதி செண்டுர்க் கொரோனாவால் பாதிக்கட்டது தெரியவந்தது. இதனால், Trabzon, Black Sea நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அவரை அழைத்து சென்ற ஆம்புலன்ஸை பின்தொடர்ந்த Boncuk, மருத்துவமனைக்கே சென்றுவிட்டது. செண்டுர்க் உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த நாய் நுழைவாயில் வரை சென்று நின்றது. தனது உரிமையாளர் வெளியே வருவார் என காத்திருந்தது.

பின்னர், செண்டுர்க்கின் மகள் Aynur Egeli, மருத்துவமனைக்கு வந்து அந்த நாயை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், அந்த நாய் மறுநாள் காலை மீண்டும் மருத்துவமனை வாசலிலேயே வந்து நின்றுள்ளது. இதனை மருத்துவமனை Aynur Egeliக்கு தெரிவிக்க, அவர் மீண்டும் நாயை அழைத்தது சென்றுள்ளார்.

ஆனால், எத்தனைமுறை அழைத்து சென்றாலும், அந்த நாய் மீண்டும் மீண்டும் மருத்துவமனை வாசலிலேயே வந்து நின்று செண்டுர்க் வருவதற்காக இரவு வரை காத்திருந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் சரியாக காலை 9 மணிக்கு Boncuk மருத்துவமனை வாசலில் வந்து நின்று, பிறகு இரவு ஆனதும் வீட்டுக்கு சென்றுள்ளது.

இதனை கவனித்த மருத்துவமனை நிர்வாகமே, செண்டுர்க்கை மருத்துவமனைக்கு வெளியே சில நிமிடங்கள் தனது செல்லப் பிராணியைப் பார்க்க அனுமதித்துள்ளது. இருவரும் சில நிமிடங்கள் ஒன்றாக நேரத்தை கழித்துள்ளனர்.

பிறகு ஜனவரி 20-ஆம் திகதி செண்டுர்க் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அன்று வரை தினமும் மருத்துவமனை வாசலில் காத்திருந்த Boncuk, டிஸ்சார்ஜ் செய்த அன்று செண்டுர்க்குடன் வீட்டுக்கு சென்றது.

இந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் உலகம் முழுக்க பலரது மனதை கொள்ளை கொண்டது. மேலும் Boncuk-ன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இதேபோன்ற சம்பவம் கடந்த ஆண்டு சீனாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்