உலகுக்கே கொரோனாவை பரப்பியதாக கூறப்படும் சீனாவின் வுஹான் நகரில் இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
897Shares

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் உருவானதாக கருதப்படும் சீனாவின் வுஹான் மாகாணம், இப்போது ஆட்டம் பாட்டம் என பார்ட்டி கொண்டாடி வருகிறது.

முதன்முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாளின் முதல் ஆண்டு தினத்தை, வுஹானை புகழும் திரைப்படம் ஒன்றை வெளியிட்டு கொண்டாடியுள்ளது சீன அரசு.

எந்த மாமிச சந்தையிலிருந்து கொரோனா முதலில் பரவியதாக கூறப்பட்டதோ அந்த சந்தைகள் திறக்கப்பட்டுவிட்டன.

இரவு நேரங்களில் மக்கள் இரவு விடுதிகளில் கூடி பார்ட்டி கொண்டாடுகிறார்கள். பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதோ சமூக இடைவெளியை பின்பற்றுவதோ இல்லை. வுஹானில் சகஜ நிலை திரும்பிவிட்டது என்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் மற்ற நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமின்றி புதிது புதிதாக திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களுடன் போராடி வருகின்றன.

எல்லாவற்றிற்கும் மேல், கிட்டத்தட்ட மற்ற எல்லா நாடுகளின் பொருளாதாரமும் கொரோனாவின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் பொருளாதாரம் 2020ஆம் ஆண்டில் 2.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளுக்கு கொரோனா காலகட்டத்தில் மாஸ்குகளை விற்றே வருவாய் பார்த்துவிட்டது சீனா.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்