சாம்சுங் நிறுவன தலைவருக்கு சிறை தண்டனை விதிப்பு

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
869Shares

தென் கொரியாவின் சாம்சங் வணிக சாம்ராஜ்யத்தின் தலைவருக்கு ஒரு பெரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட, உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் மெமரி சிப் தயாரிப்பாளரான சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக Lee Jae-yong உள்ளார்.

சாம்சங் குழுமத்தின் 3-ஆம் தலைமுறை தலைவரான லீ, அவரது தந்தை Lee Kun-hee மரணத்துக்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், சாம்சுங் நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இரண்டு இணை நிறுவங்களை ஒன்றிணைப்பதற்காக, முன்னாள் தென் கொரியா அதிபர் Park Geun Hye-வின் கூட்டாளியான Choi Soon-sil என்பவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக Lee Jae-yong 2017-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டது, பின்னர் மேல்முறையீடு செய்ததில் அந்த தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் Lee Jae-yongக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . இந்த தீர்ப்பு இப்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், சாம்சுங் நிறுவனம் அதன் உச்சபட்ச முடிவெடுப்பாளரை தற்காலிகமாக இழந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்