தோண்டத் தோண்ட கிடைக்கும் சடலங்கள்! இந்தோனேசியாவில் நடந்த கோர சம்பவம்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
397Shares

இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 73 பேர் உயர்ந்துள்ளதாகவும், மேலும் மீட்புப் பணி தொடர்ந்துவருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) அதிகாலை 1.30 மணியளவில் மாமுஜு நகரம் மற்றும் மஜெனே மாவட்டத்தில் 6.2 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள், 2 மருத்துவமனைகள், 2 ஹோட்டல்கள் மற்றும் பிராந்திய ஆளுநரின் அலுவலகம் ஆகியவை முழுவதுமாக இடிந்து சேதமடைந்தது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தாள் ஏற்பட்ட மலைச்சரிவுகள் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் பலர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், அவர்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக சென்றுள்ளாரா அல்லது இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தெரியவில்லை. இதனால் மீட்புப்பணி தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.

அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணி தாமதமாகியுள்ளது. மேலும் மீட்புப் பணியில் வேகத்தைக் கூட்ட சாலைகள் சீர் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கோரமான இயற்கை பேரிடரில் 820-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 27,800-க்கும் மேற்பட்டோர் தங்கள் சேதமடைந்த வீடுகள் மற்றும் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

சிலர் மலைகளில் தஞ்சம் புகுந்ததாவும், மற்றவர்கள் நெருக்கடியான நிவாரண மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு முயற்சிகளுக்கு உதவும் நோக்கில் அவசரகால பதிலளிப்பு நிலையும் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிராந்தியத்தின் பல பகுதிகளில் கொள்ளையடிப்பதைத் தடுக்க பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனத்தின் தலைவரான டுவிகோரிடா கர்னாவதி, இப்பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டால் சுனாமியைத் தூண்டக்கூடும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்