இனி திருட்டில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை உறுதி! எச்சரித்த பொலிஸ்: எந்த நாட்டில் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
748Shares

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவின், பொலிஸ் போல் நடித்து திருட்டில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகில் செய்யும் குற்றத்திற்காக கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று, இங்கு சிறிய தவறுக்கு கூட கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும்.

அதன் காரணமாகவே அங்கு குற்றச் செயல்கள் அந்தளவிற்கு நடப்பதில்லை.

இந்நிலையில், தற்போது சார்ஜா பொலிசார் எச்சரிக்கை தகவலை ஒன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், சார்ஜா பகுதியில் பொலிஸ் என கூறி பொதுமக்களிடம் சோதனையில் சிலர் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்கள் தங்களை பொலிசார் என கூறி யாராவது நிறுத்தினால் அவர்களது அடையாள அட்டையை வாங்கி பார்க்க வேண்டும். அடையாள சட்டையை சரியாக காண்பிக்காமல் இருந்தால், மீண்டும் வாங்கி பார்க்க முழு உரிமை உள்ளது.

மேலும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொதுவான சோதனைகளின் போது பொலிசார் அடையாள அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை மட்டுமே வாங்கி சோதனை செய்வர். பணப்பை உள்ளிட்ட பொருட்களை வாங்கி சோதனை செய்ய மாட்டார்கள்.

இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுபவர்கள் அரபு மொழி பேசாதவர்களிடம் மட்டுமே தங்களது செயலை காண்பித்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரபு, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்