நாங்கள் என்ன தீவிரவாதிகளா? வான் தாக்குதலில் கொத்தாக கொல்லப்பட்ட ஒரே குடும்பத்து 18 பேர்: குமுறும் மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
285Shares

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஆதரவு ஆப்கான் படைகள் சனிக்கிழமை நள்ளிரவு மேற்கொண்ட அதிரடி வான்வழித்தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகளும் 5 தலிபான் ஆதரவு உள்ளூர் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் மாகாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் கொத்தாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் பெண்களும் சிறார்களும் உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு படைகள் எங்கள் மீது தாக்குதல் நடத்த என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ள மக்கள், நாங்கள் என்ன தீவிரவாதிகளா? எங்கள் மீதான குற்றச்சாட்டு என்ன எனவும் வினவியுள்ளனர்.

ஆனால் ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம், தீவிரவாதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் மட்டுமே அறிக்கை வெளியிட்டுள்ளதுடன்,

பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, நிம்ரோஸ் மாகாணத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்ற செய்தியால் தாம் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி திங்களன்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்