இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: இதுவரை 42 பேர் பலி., சுனாமி வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம்!

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
122Shares

இந்தோனேசியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுளதால், மேலும் ஒரு சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் அது சுனாமியைத் தூண்டக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மாமுஜு நகரம் மற்றும் மஜெனே மாவட்டத்தில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 300-க்கும் மேற்பட்ட வீடுகளையும், 2 ஹோட்டல்கள், ஒரு மருத்துவமனை மற்றும் பிராந்திய ஆளுநரின் அலுவலகத்தை முழுவதுமாக சேதப்படுத்தியது.

இடிபாடுகளில் சிக்கி இதுவரை 42 பேர் இறந்துள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

15,000-க்கும் அதிகமான மக்கள் இடிபாடுகளிலிருந்து தப்பிக்க தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் 10 மையங்களில் தங்குமிடம் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பனி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்தோனேசியாவில், கடந்த 30 நாட்களில் ரிக்டர் அளவுகோலில் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் 3 நிலநடுக்கங்கள், 5.0 மற்றும் 6.0க்கு இடையில் 22 நிலநடுக்கங்கள், 4.0 மற்றும் 5.0க்கு இடையில் 143 நிலநடுக்கங்கள், 3.0 மற்றும் 4.0க்கு இடையில் 367 நிலநடுக்கங்கள் மற்றும் 2.0 மற்றும் 3.0க்கு இடையில் 247 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுவாக உணரப்படாத 2.0 ரிக்டருக்கும் கீழே 13 நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இருப்பினும் இதுவரை சுனாமிக்கான எச்சரிக்கை விடப்படவில்லை. ஆனால், இந்த நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் போன்று அல்லது அதற்கும் அதிகமான சக்திகொண்ட நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டால் கூட, அது சுனாமியைத் தூண்டும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்