14 வயது சிறுவனின் வெறிச்செயல்... இரத்தவெள்ளத்தில் மிதந்த குடும்பம்: நாட்டையே உலுக்கிய சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1400Shares

சைப்ரஸ் நாட்டில் தூக்கத்தில் இருந்து பெற்றோரை 14 வயதான பாடசாலை மாணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

வடக்கு சைப்ரசின் Lefkoniko நகரிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 52 வயதான Ibrahim Cobanoglu மற்றும் அவரது மனைவி 48 வயதான Bengu ஆகியோரின் சடலங்களை அக்கம் பக்கத்தினரே கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களது இளைய மகன் 14 வயதேயான Cınar Cobanoglu துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பித்தாலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கொல்லப்பட்ட குறித்த தம்பதியின் 18 வயது மகன் Erlap தமது சகோதரரின் துப்பாக்கி தாக்குதலில் இருந்து தப்பி, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் அக்கம் பக்கத்தினர் அந்த குடியிருப்புக்கு செல்லும் முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்து முடிந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு மூன்று மணி அளவிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்ததாக அண்டை வீட்டார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட தம்பதியின் மூத்த மகன், தங்களை காப்பாற்ற கேட்டு நின்றதாகவும், ஆனால் தங்களுக்கு துப்பாக்கி சத்தம் ஏதும் கேட்கவில்லை எனவும்,

அந்த குடியிருப்பில் சென்ற போது பெற்றோர்கள் கொல்லப்பட்ட நிலையிலும், அந்த சிறுவன் இரத்தத்தில் குளித்தபடி ஒரு ஓரமாக அமர்ந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பொலிசாருக்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் இந்த வழக்கு தொடர்பில் விசாரித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்