உலக நாடுகளுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து! ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்த முக்கிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
163Shares

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதிலும் பரவி, ஒரு சில நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டு வருகிறது.

இதனால் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

ஒரு சில நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி இறுதிகட்டத்திலும், சில நாடுகளில் அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது.

அதில், குறிப்பாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பு மருந்து உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இது மேலைநாட்டுத் தடுப்பு மருந்துகளான ஆஸ்ட்ராசெனேகா, பைசர், பயான்டெக் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கு இணையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பின் உதவியோடு ரஷ்யா ஒன்றரை கோடி உலக மக்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கல் மோர்சாக்கோ இது குறித்து கூறுகையில் ரஷ்யாவில் 8 லட்சம் ரஷ்யர்களுக்கு இந்தத் தடுப்புமருந்து இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 34 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் அதில் 62 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்துள்ளதாக ரஷ்ய அரசு வட்டாரம் கூறியுள்ளது.

ஸ்பூட்நிக் ஐந்து தடுப்பு மருந்து மூன்றுகட்ட சோதனைகளை முடித்து வெற்றிபெற்ற தடுப்பு மருந்தா என்ற கேள்வி இன்னும் பல இடத்தில் உள்ளது. ஆனால் மேலை நாட்டு மருந்துகளை நம்பாமல் சீனாவும் ரஷ்யாவும் தங்களது சொந்த தயாரிப்புகளை இதுவரை பயன்படுத்தி பலனடைந்து வருகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்