மர்மமான நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு தற்போது கிடைத்துள்ள இன்னொரு முக்கிய பதவி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
185Shares

வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக அதிபர் கிம் ஜாங் உன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயமானது இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மர்மமான நாடாக கருதப்படும் வடகொரியாவின் அதிபராகவும் தொழிலாளர் கட்சியின் பொது செயலாளருமாகவும் இருந்தவர் கிம் ஜாங்-2

இவர் கடந்த 2011ம் ஆண்டில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகனான கிம் ஜாங் உன் அதிபராக பதவியேற்றார்.

இருந்த போதிலும் பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் புதிதாக தேர்வு செய்யப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது அதிகாரபூர்வமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்