பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி ரஷ்யாவுக்குள் நுழைந்த பிரித்தானிய வகை கொரோனா வைரஸ்! அச்சத்தில் அதிகாரிகள்

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
70Shares

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸின் முதல் பாதிப்பை ரஷ்யா பதிவு செய்துள்ளது.

உலகிலேயே மிக அதிகமான தொற்று வீதங்களைக் கொண்டுள்ள நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து இதுவரை மொத்தம் 3.5 மில்லியன் கொரோனா பாதிப்புகளை அந்நாடு உறுதிசெய்துள்ளது.

கடந்த மாதம் பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியில் முதல் முறையாக கண்டறியப்பட்ட B117 எனும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. 70 சதவீதம் மிகவும் வேகமாகப் பரவக்கூடியதாக மருத்துவர்கள் எச்சரிக்கும் இந்த வைரஸ் பிரித்தானியாவின் மற்ற பகுதிகளிலும் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது.

அங்கிருந்து பயணித்தவர்கள் மூலமாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகளில் B117 தொற்று பரவியதையடுத்து, அனைத்து நாடுகளும் பிரித்தானியா உடனான விமான சேவைகளுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதித்தன. அதில் ரஷ்யாவும் ஒன்று.

இருப்பினும், பிரித்தானியாவிலிருந்து ரஷ்யாவுக்கு நாடு திரும்பிய ஒரு நபருக்கு இப்போது B117 வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நபருக்கு எப்போது கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்நிலையில், இன்னும் எத்தனை பேருக்கு இது போன்று தொற்று இருக்கும், அது வேகமாக நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவினால், தொற்று எண்ணிக்கை பல மடங்கு உயரலாம் என அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ரஷ்யாவை உலகளவில் மூன்றாவது மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அறியப்படும் நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டதை விட நாட்டின் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கடந்த மாதம் ஒப்புக் கொண்டனர்.

இருப்பினும் இது போன்ற சூழ்நிலையில், பிரித்தானியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள பூட்டுதல் நடவடிக்கைகளை போல் முடிவெடுக்காமல், பதிலாக தொற்றுநோயை எதிர்ப்பதற்காக உள்நாட்டு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மீது ரஷ்யா தனது நம்பிக்கையை வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்