ஜப்பானில் புதிய வகைக் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! ஒரே நாட்டிலிருந்து வந்த 4 பேருக்கு தொற்று உறுதி!

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
68Shares

பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களிலிருந்து, முற்றிலுமாக மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் விமான நிலையத்தில் ஜனவரி 2-ஆம் திகதி நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில், பிரேசில் நாட்டிலிருந்து வந்த 4 பயணிகளுக்கு மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது.

அவர்களின் சோதனை மாதிரிகளை ஆய்வு செய்யும்போது, அந்த வைரஸ் பிரித்தானியா அல்லது தென்னாப்பிரிக்காவில் பரவிவரும் உருமாறிய வைரஸ்கள் இல்லை என்றும் இது அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 4 பயணிகள் அனைவரும் பிரேசிலின் Amazonas மாகாணத்திலிருந்து வந்தவர்கள் எனகே கூறப்படுகிறது. அவர்களில், ஒரு ஆண் 50 வயதுக்கு உட்பட்டவர், ஒரு பெண் 40 வயதுக்கு உட்பட்டவர், மற்ற இருவரும் பதின்ம வயதுகளில் உள்ளவர்கள்.

50 வயதுக்கு உட்பட்ட நபருக்கு முதலில் எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை, ஆனால் ஓரிரு நாட்கள் கழித்து சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

40 வயதுக்கு உட்பட்ட பெண்ணுக்கு தலை வலி ஏற்பட்டுள்ளது, டீனேஜ் ஆணுக்கு காய்ச்சல் வந்துள்ளது, ஆனால் டீனேஜ் பெண்ணுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை.

ஜப்பான் இந்த புதிய வகை வைரஸை ஆய்வு செய்ய WHO, மற்ற நாடுகள் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

மேலும் தற்போது கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக செயல்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஜப்பானில், பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் பரவும் உருமாறிய வைரஸ்களால் சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகை வைரஸ்கள் மிக வேகமாக பரவுவதாக ஜப்பான் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்