"நடந்ததை யாரிடமாவது சொன்ன..." சிறுமியை திட்டமிட்டு சீரழித்த 20 வயது அத்தை! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
836Shares

ஜிம்பாப்வே நாட்டில் 20 வயது பெண் ஒருவர் தனது சொந்தக்கார சிறுமியை ஆள் வைத்து சீரழித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் 13 வயது சிறுமி மவுண்ட் டார்வினில் இருக்கும் தனது அத்தை Luckness Nyandangu வீட்டிற்கு விடுமுறைக்காக சென்றுள்ளார்.

மறுநாள் புத்தாண்டு என்ற நிலையில், டிசம்பர் 31-ஆம் திகதி சிறுமி Nyandangu வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் திடீரென அந்த வீட்டுக்குள் ஒரு ஆண் நுழைந்துள்ளார். முழித்துப் பார்த்து மிரண்டு போன சிறுமி செய்வதறியாது திகைத்தாள்.

உடனடியாக சிறுமியின் வாயைக் கட்டிய அந்த நபர், சிறுமியை துடிக்கத் துடிக்க துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்பு, கட்டை அவிழ்த்து 'நடந்ததை பற்றி வெளியே வாய் திறந்தாள் கொன்றுவிடுவேன்' என மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, பயந்த நிலையில் விஷயத்தை யாரிடமாவது சொல்லலாம் என சிறுமி வெளியே வர, திடீரென அவளது அத்தை அங்கு வந்து நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மீண்டும் மிரட்டி வைத்துள்ளார்.

இந்த விடயங்கள் அனைத்து ஜனவரி 6 ஆம் திகதி தான் வெளிவருகிறது.

சம்பவம் நடந்ததிலிருந்து அடுத்த 5 நாட்களுக்கு சகித்துக்கொண்டு நியாண்டங்கு வீட்டிலிருந்த சிறுமி, அடுத்த நாள் பக்கத்து கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று, தனது அம்மாவிடம் அனைத்தையும் கூறியுள்ளார்.

விடயம் அறிந்து பெரும் கோபத்துக்கும், வேதனைக்கும் உள்ளான சிறுமியின் தாய், போலீசில் புகார் அளித்தார்.

உடனடியாக Nyandanguவை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான், சிறுமியை சீரழிக்க வந்தவன் நியாண்டங்குவின் கூட்டாளி Takudzwa Bamava என்றும், அவள் தான் சிறுமியை கெடுக்க திட்டம் தீட்டி இந்த காரியத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இப்பொது Nyandangu மற்றும் Bamava இருவரும் கைது செய்யப்பட்டு ஜனவரி 21-ஆம் தேதி ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்