ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று காலை நடத்த வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய நபர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதையடுத்தது, தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
ஆப்கானிஸ்தானில் பல ஊடக நெட்வொர்க்குகளில் பணியாற்றி, பின்னர் தேசிய பொதுப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் ஜியா வதான், தனது 2 சகாக்களுடன் இன்று காலை காரில் சென்றுகொண்டிருந்தார்.
காபுல் நகரத்தின் கிழக்குப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தயில் காரில் பயணித்துக்கொண்டிருந்தபொது, அவரது காரை நோக்கி குறிவைக்கப்பட்ட IED வெடிகுண்டு வந்து தாக்கியது.
இதில் கார் வெடித்து, சம்பவ இடத்திலேயே 3 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தாக்குதலுக்கு இதுவரை எந்தக் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அரசாங்கத்திற்கும் தாலிபானுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையிலும், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்கள் உள்ளிட்ட உயர்மட்ட நபர்கள் அதிகளவில் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுவருகின்றனர்.
தொடர்ச்சியாக பல திட்டமிட்ட தாக்குதல்கள் அங்கு நடைபெற்றுவரும் நிலையில், இப்போது ஜியா வதான் கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தான் மற்றும் குறிப்பாக காபுல் நகரில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பர் முதல், 5 பத்திரிகையாளர்கள் பல முக்கிய நபர்களுடன் இதுபோன்று கொல்லப்பட்டுள்ளனர்.
ஜியா வதான், ஆப்கானிஸ்தான் முழுவதிலும் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கு காவலர்களை அனுப்பும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு சேவையான தேசிய பொது பாதுகாப்பு படையின் (NPPF) செய்தித் தொடர்பாளராக இருந்தவர்.