இந்தோனேசியாவில் தொடர் கனமழையால் அடுத்தடுத்து 2 நிலச்சரிவு; இதுவரை 11 பேர் பலி!

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
26Shares

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் தற்போது கடும் மழை பெய்துவரும் நிலையில், மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சிஹாஞ்சுவாங் கிராமத்தில் சனிக்கிழமை வெள்ளம் ஏற்பட்டது.

இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திடீரென அப்பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக அப்பகுதிக்கு சென்ற இந்தோனேசிய பேரிடர் மீட்புக் குழு, நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்ததுச் சென்றனர்.

மீட்புப்பணி நடந்துகொண்டிருக்கும் வேளையில், அதேபகுதியில் மீண்டும் 7.30 மணிக்கு இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி மேலும் சேதமடைந்தது, அங்கிருந்த ஆம்புலன்ஸ் மற்றும் கிரேன்களின் மேல் நிலம் சரிந்தது. இதன்காரணமாக மீட்புப்பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாக Indonesian National Board for Disaster Management தெரிவித்துள்ளது. மேலும், தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்துவருவதால் ஞாயிற்றுக்கிழைமையிலும் மீட்புப்பணியில் தாமதம் ஏற்படும் என BNPB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு ஆளாகிறது, குறிப்பாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான மழைக்காலங்களில், காடுகளை வெட்டுவதன் மூலம் பெரும்பாலும் நிலைமை மோசமடைகிறது.

லா நினா வானிலை அமைப்பிலிருந்து கொடுக்கப்பட்ட தகவலைக் கொண்டு, ஜனாதிபதி ஜோகோ விடோடோ கடந்த ஆக்டொபர் மாதமே, வரக்கூடிய கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அது நாட்டின் விவசாய உற்பத்தியை பாதிக்கும் என்றும் இந்தோனேசிய மக்களை எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்