நகரை உலுக்கிய பயங்கர வெடி விபத்து! சீன தொழிற்சாலை தூள் தூளாக சிதறிய திகிலூட்டும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
328Shares

சீனவில் பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து சம்பவம் நகரையே உலுக்கியுள்ளது.

சீனாவின் Hunan மாகாணத்தில் உள்ள Ningxiang நகரிலே இந்த பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

Ningxiang நகரில் உள்ள Brunp மறுசுழற்சி தொழில்நுட்ப தொழிற்சாலையிலே இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. வெடி விபத்தில் தொழிற்சாலை தூள் தூளாக சிதறும் திகிலூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Brunp தொழிற்சாலை, பழைய லித்தியம் அயன் பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் சீனாவின் மிகப்பெரிய நிறுவனமாகும்.

இந்த வெடி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெடி விபத்தை அடுத்து சுமார் 36 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 288 தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு அனுப்பப்பட்டனர், இறுதியில் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தொழிற்சாலையின் உரிமையாளர் நிறுவனம், இதன் விளைவாக பாதுகாப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது, காயமடைந்தவர்கள் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை, அதே நேரத்தில் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள காற்றின் தரம் மாசுபடவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்