அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கடந்த வாரம் ஹொங்கொங்கில் 50க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறிய சந்தேகத்தின் பேரில், கடந்த புதன் கிழமை 55 ஜனநாயக சார்பு ஆர்வலர்களை கடந்த புதைக்கிழமை ஹொங்கொங் பொலிஸ் கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் பிரபல ஜனநாயக பிரமுகர்கள் மற்றும் முன்னாள் சட்டமியற்றுபவர்கள் ஜேம்ஸ் டூ, லாம் சியூக்-டிங் மற்றும் லெஸ்டர் ஷம் ஆகியோர் அடங்குவர்.
55 பேர் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை, மேலும் அதில் மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. குற்றச்சாட்டுகள் அவர்களை பதவிக்கு போட்டியிட தகுதியிழக்கச் செய்யலாம்.
சட்டமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, கடந்த ஆண்டு சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட வாக்குப்பதிவில் பங்கேற்றதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சீன அரசங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, கண்டா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை மைச்சர்கள் சேர்ந்து ஒரு கூட்டு கண்டன அறிக்கையை சீனாவுக்கு எதிராக வெளியிட்டுள்ளனர்.
சட்டபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதிக்கும்படி ஹாங்காங் மற்றும் சீன மத்திய அதிகாரிகளை அறிவுறுத்தி இந்த கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ஆஸ்திரேலியாவின் மரைஸ் பெய்ன், கனடாவின் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், பிரித்தானியாவின் டொமினிக் ராப் மற்றும் அமெரிக்காவின் மைக் பாம்பியோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.