சற்று முன்... இந்தோனேசியாவில் பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் மாயம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
665Shares

இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட போயிங் விமானம் ஒன்று திடீரென மாயமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

50 பயணிகளுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் ஒன்று, கடல் பரப்புக்கு மேல் பறந்து செல்லும்போது 10,000 அடி உயரத்திலிருந்து கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

அந்த The Sriwijaya Air விமானம், ஜகார்தாவிலிருந்து Pontianak என்ற இடம் நோக்கி புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட மூன்றரை நிமிடங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அந்த விமானம் கடலில் விழுந்துள்ளது.

விமானத்தில் பயணித்தவர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த தகவலை, இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகமும் உறுதிசெய்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்