கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சவுதி மன்னர்! எந்த நிறுவனத்துடையது? வெளியான வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்
517Shares

85 வயதான சவுதி மன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வீடியோவை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

Pfizer-BioNtech உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகரம் அளித்த சவுதி, கடந்த மாதம் முதல் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது.

மேலும், அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என சவுதி அறிவித்தது.

தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் 35 வயதான சவுதி பட்டத்து இளவரசர் தடுப்பூசியை போட்டுக்கொண்டார், குறித்த படங்கள் மற்றும் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது 85 வயதான சவுதி மன்னர் Salman bin Abdulaziz Al Saud, நியோம் நகரில் Pfizer-BioNtech தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை அதிகரிக்கும் விதமாக 85 வயதான சவுதி மன்னர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் Tawfiq bin Fawzan Al-Rabiah நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், மன்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்