சீனா மீது கடுமையான பொருளாதார தடைகள்... எச்சரிக்கும் அமெரிக்கா: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
108Shares

ஹொங்ஹொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீனா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொங்ஹொங்கில் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் ஹொங்ஹொங் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது.

இந்த சட்டம் ஹொங்ஹொங்கின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என அமெரிக்கா முதல் நாடாக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆர்வலர்களை ஹொங்ஹொங் பொலிசார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன.

இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹொங்ஹொங் மற்றும் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தநிலையில் ஹொங்ஹொங் ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சீன அரசு மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்