ஈரானை அடுத்து டிரம்ப் மீது கைது ஆணை பிறப்பித்த இன்னொரு நாடு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1312Shares

ஈரானிய தளபதி சுலைமானியைக் கொன்ற வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈராக் நீதிமன்றம் பிணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் ஈராக் துணை ராணுவப் படையான ஹஷீத் அல்-ஷாபியின் வாகனங்கள் மீது கடந்த 2020 ஜனவரி மாதம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய அந்தத் தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவான காத்ஸ் படையின் தலைவர் காசிம் சுலைமானி உயிரிழந்தார். மேலும் 7 பேர் பலியாகினர்.

அதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்தது. ஈரான் தளபதி கொல்லப்பட்டதிலிருந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவாணது சர்வதேச அமைப்பால் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஈரான் இரண்டாவது முறையாக மீண்டும் கைது ஆணை பிறப்பித்தது.

தொடர்ந்து அதே கரணத்தை குறிப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கைது ஆணை பிறப்பித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்