அமெரிக்காவை அழிவு பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டார் டிரம்ப்! பாடம் கத்துக்கோங்க: ஈரான் அதிபர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
180Shares

அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் நாட்டையே அழிவு பாதைக்கு அழைத்து சென்றுவிட்டதாக ஈரான் அதிபர்

ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி அங்கிருக்கும் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தை நோக்கி டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வர, இதைக் கண்ட பொலிசார் அவர்களை விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் டிரம்ப்பிற்கும், பொலிசாருக்கும் இடையே தள்ளு முள்ளும் ஏற்பட்டதால், கூட்டத்தைக் கலைக்கும் வகையில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.

இச்சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று கண்டது மேற்கத்திய ஜனநாயகம் எவ்வளவு பலவீனமானது மற்றும் பாதிக்கப்படக்கூடியது என்பதைக் காட்டுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் டிரம்ப் நாட்டையே அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அடுத்து வெள்ளை மாளிக்கைக்கு வருபவர் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். புதிதாக வருபவர்கள் அமெரிக்காவை மீட்டெடுக்க வேண்டும். ஏனெனில் அமெரிக்கா சிறந்த தேசமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்