வெளிநாட்டில் கணவருடன் வசித்த மனைவி! பிரசவத்துக்காக சொந்த ஊர் திரும்பிய அவருக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்... என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
1188Shares

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் அப்துசலாம். இவர் ஓமனில் வசித்து வருகிறார். அங்கு சில தொழில்களை அப்துசலாம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அப்துசலாமும் அவரின் 7 நண்பர்களும் சேர்ந்து லொட்டரி டிக்கெட்களை வாங்க முடிவு செய்தனர்.

அதில் யாருக்கு பரிசு விழுந்தாலும் அதை சரிசமமாக பிரிந்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தமும் போட்டு கொண்டனர் அதன்படி அபுதாபி பிக் டிக்கெட் லொட்டரியில் அப்துசலாமுக்கு OMR 2 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

இதன் மூலம் அப்துசலாம் மற்றும் நண்பர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.

இது குறித்து அப்துசலாம் கூறுகையில், எனக்கு பரிசு விழுந்ததாக உறவினர்கள் கூறிய போது நான் நம்பவில்லை.

என்னை நம்ப வைக்க சகோதரர் முயற்சி செய்தும் நான் அதை கேட்கவில்லை.

பின்னர் லொட்டரி அமைப்பாளர்கள் என்னை தொடர்பு கொண்ட பின்னரே அதை நம்பினேன்.

இந்த பரிசு பணத்தில் குறிப்பிட்ட தொகையை நல்ல விடயங்களுக்காக செலவிட நானும் என் நண்பர்களும் முடிவு செய்துள்ளோம்.

கேரளாவில் மழை வெள்ளம் வந்ததோடு கொரோனாவால் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

அப்படி கஷ்டப்படும் நபர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம்.

முக்கியமாக பகட்டான விழாக்களை நடத்த முடியாத பலரின் வெகுஜன திருமணங்களைத் நடத்த உள்ளோம் என கூறியுள்ளார்.

அப்துசலாமின் மனைவி பிரசவத்துக்காக சொந்த ஊரான கேரளாவுக்கு திரும்பியிருக்கும் நிலையில் கணவருக்கு பரிசு விழுந்துள்ள செய்தி அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அவருக்கு பிரசவம் முடிந்து விட்டதால் விரைவில் ஓமனுக்கு திரும்பவுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்