இது உலகப்போருக்கு சமமானதாகும்! ஐ.நாவில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நாடு... முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
636Shares

இரண்டு உலகப் போர்களைப் போல, தற்போது பயங்கரவாதம் மூலம் போர் நடத்தப்படுகிறது என ஐநாவில் இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா தலைமையகத்தில், இரண்டாம் உலகப் போரின், 75வது ஆண்டையொட்டி, போரில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய இந்திய தூது குழுவின் செயலர் ஆஷிஷ் சர்மா பேசியதாவது, தற்போது, ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் வழிகளில் ஒன்றாக, பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது. இரண்டு உலகப் போர்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.அதுபோன்ற படுகொலைகள், பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்படுகின்றன. இது, உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

அவர்களின் தியாகத்தை மறக்க முடியாது. அதுபோல, காலனி ஆதிக்கத்தில் இருந்த போதும், கூட்டு நாடுகளின் சுதந்திரத்திற்காக, ஆசிய, ஆப்ரிக்க, அரபு நாடுகளின் சகோதரர்கள் போரிட்டு, உயிர் தியாகம் செய்ததும் நம் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

இரு உலகப் போர்களை பற்றி, ஏராளமான ஐரோப்பிய நாவல்கள், வரலாற்று புதினங்கள், திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால், காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில், போர் வீரர்கள் செய்த தியாகம் அந்த அளவிற்கு பிரபலப்படுத்தப்பட வில்லை என்பது வருத்தத்திற்குரியது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்