கொரோனாவால் உலகமே பொருளாதாரத்தில் தடுமாறிக்கொண்டிருக்க வர்த்தகத்தில் அமெரிக்காவையே முந்தியுள்ளது இந்த நாடு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
338Shares

கொரோனா பரவல், மக்களின் உடல் நலனை மட்டுமல்லாது பொருளாதாரத்தையும் ஒரு வழியாக்கிவிட்டது அனைவரும் அறிந்ததே.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் பொருளாதார ரீதியாக தடுமாறிக்கொண்டிருக்க, அமெரிக்காவை மிஞ்சி முன்னேறியுள்ளது ஒரு நாடு.

அந்த நாடு சீனா! ஆம், சீனா அமெரிக்காவை மிஞ்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் வர்த்தக கூட்டாளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றியதாக கருதப்படும் கொரோனா அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஒரு வழியாக்கிவிட்ட நிலையில், சீனாவோ மூன்றாவது காலாண்டில் அமெரிக்காவையே பின் தள்ளி ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தில் கோலோச்சியுள்ளது.

2020ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவுக்கும் இடையில் நடந்துள்ள வர்த்தகத்தின் மதிப்பு 425.5 பில்லியன் யூரோக்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்துள்ள வர்த்தகத்தின் மதிப்பு 412.5 பில்லியன் யூரோக்கள் மட்டுமே.

எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சீனா, கொரோனாவையும் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு மாஸ்க் மற்றும் மருத்துவ பொருட்களையும் ஏற்றுமதி செய்து லாபம் பார்த்துவிட்டது.

கடந்த ஆண்டை ஒப்பிட்டால், இந்த செப்டம்பரில் சீனாவின் ஏற்றுமதி 9.9 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோக, சீனாவின் தொழில்நுட்பத்துறையும் வீட்டிலிருந்து வேலைபார்ப்பவர்களின் தேவையை பயன்படுத்திக்கொண்டு, DingTalk மற்றும் WeChat ஆப்ப்களின் மூலம் நல்ல வருமானம் பார்த்துவிட்டது.

ஆக, மற்ற நாடுகள் சீனா கொரோனாவை பரப்பிவிட்டதற்கான ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், அது சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு அமெரிக்காவையே மிஞ்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய வர்த்தக கூட்டாளி என்ற பெயரையும் பெற்றுவிட்டது!

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்