சீனாவால் இது திட்டமிட்டு நடத்தப்பட்டது... கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்கள்: அமெரிக்க ஆணையம் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1410Shares

இந்தியா மற்றும் சீனா இடையே வார்த்தை போர் ஏற்பட்டு வரும் நிலையில், கல்வான் தாக்குதல் சீன அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அமெரிக்க ஆணையம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

லடாக்கின் இந்திய - சீன எல்லைப் பகுதியில் உள்ளது கல்வான் பள்ளதாக்கு. இந்திய பகுதியான இதனை முழுவதுமாக சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

கடந்த ஜூன் 15-ஆம் திகதி இங்கு இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன இராணுவம் தரப்பிலும் கனிசமானோர் பலியாகினர். அது பற்றிய தகவலை அந்நாடு தெரிவிக்கவில்லை.

இத்தாக்குதல் சீன அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஒன்று என அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆணையம் 2000-ஆம் ஆண்டில் அமெரிக்க பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவு தேசிய பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இவ்வாணையம் ஆண்டறிக்கை தாக்கல் செய்யும்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அந்த அறிக்கையில், 8 மாதங்கள் நீடித்த இந்திய-சீன மோதல் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமானது.

இதனை சீன அரசாங்கம் திட்டமிட்டதாக சில நிகழ்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, மோதலுக்கு பல வாரங்களுக்கு முன்னர், சீன பாதுகாப்பு அமைச்சர், ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக சண்டையைப் பயன்படுத்தும்படி அறிவித்திருந்தார்.

சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸில், அமெரிக்கா - சீனா போட்டியில் இந்தியா ஈடுபட்டால், சீனாவுடனான அதன் வர்த்தக மற்றும் பொருளாதார உறவு மோசமான அடியை சந்திக்கும் என்றது.

மே மாத தொடக்கத்தில் நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் பல செக்டார்களில் தொடர்ச்சியான மோதல்கள் நிலவியது.

அதனைத் தொடர்ந்து நடந்த கல்வான் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மோதலின் குறிக்கோள் பிரதேசத்தை பெறுவது ஆகும். சீனா இத்தாக்குதலை வெற்றியாக கருதுகிறது.

இந்தியா தனது பகுதியில் ஏற்படுத்தி வரும் கட்டமைப்புகளை தடுக்கவோ அல்லது அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருப்பதை எச்சரிக்கவோ இத்தாக்குதல் நடந்திருக்கலாம்.

ஆனால் அதில் சீனாவின் முயற்சி பலனளிக்கவில்லை. சீனா - இந்தியா இடையே பல ஆண்டுகளாக நேரடி மோதல் இருந்துள்ளது. அதிபர் ஜி ஜிங் பிங் 2012-ல் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து இரு நாடுகளும் தங்கள் எல்லையில் ஐந்து பெரிய மோதல்களைக் கண்டன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்