54 வயது நபரின் வெறிச் செயல்! மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: பரிதாப நிலையில் 4 வயது சிறுமி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
768Shares

சீனாவில் நான்கு வயது சிறுமியை கடத்தி சென்று சீரழித்த 54 வயது நபருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

சீனாவில் யான் யான் என்று புனைப்பெயரால அழைக்கப்படும் நான்கு வயது சிறுமி, கடுமையான உறுப்பு நோய் தொற்று மற்றும் காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

சிறுமியின் இந்த நிலைமைக்கு காரணமான 54 வயது மதிக்கத்தக்க லியு என்ற நபருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் திகதி, குறித்த சிறுமி காணமல் போனதையடுத்து, பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி காணமல் போவதற்கு முன்பு, பக்கத்து வீட்டுக்காரரான லியு என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு குடிக்க தண்ணீர் கேட்டு வந்ததாக அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

அதன் பின் மறுநாள் காலையில் சிறுமியின் சிறுமியின் கால்சட்டையில் இரத்த காயங்கள் போன்றவை இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து குடும்பத்தினர் சிறுமிக்கு ஏதோ நடந்துள்ளது என்று பொலிசில் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக கூறி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.

சிறுமியின் பெற்றோர், இன்னும் உடல்நிலை மோசமாக இருக்கிறது, அவளுடைய உடல் உறுப்புகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன, சிறுநீரகம் செயலிழப்பால் அவதிப்பட்டு வருவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

இதையடுத்து இதற்கு காரணமான லியுவை பொலிசார் விசாரித்த போது, அந்த நபர் சிறுமியை வீட்டில் இருந்து கடத்திச் சென்று, அருகில் இருக்கும் கட்டுபான பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் இருக்கும் வடிகால் பள்ளத்தில், வைத்து வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளான்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு ஹார்பின் இடைநிலை மக்கள் நீதிமன்றம் வழங்கியது.

அதில் குற்றவாளியான லியுவுக்கு மரணதண்டனை விதிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, எதிர்த்து லியு மேல்முறையீடு செய்கிறாரா? இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் குறித்த சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்