சந்தேகத்தின் பேரில் கர்ப்பிணியை தடுத்து நிறுத்திய பொலிசார்: சோதனையின்போது கண்ட அதிரவைத்த காட்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
628Shares

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக துப்புக் கிடைத்ததையடுத்து சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், சந்தேகத்தின் பேரில் கர்ப்பிணி ஒருவரை சோதனையிட்டுள்ளனர்.

ஆனால், சோதனையில் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது... ஆம், அந்த பெண் கர்ப்பிணியே அல்ல! அவரது வயிற்றுக்குள் தர்பூசணிப்பழம் ஒன்றை மறைத்துவைத்திருந்திருக்கிறார் அந்தப் பெண்.

அந்த தர்பூசணிக்குள் நான்கு பவுண்டுகளுக்கும் அதிகமான எடை கொண்ட நான்கு கொக்கைன் கட்டிகள் இருந்துள்ளன.

விசாரணையில், தான் அந்த போதைப்பொருளை Paraguay நாட்டிலிருந்து பெற்று, Rio de Janeiroவுக்கு கொண்டு செல்ல ஒப்புக்கொண்டதாக தெரியவந்தது.

அதற்காக அவருக்கு 100 டொலர்கள் கொடுக்கப்படுமாம். இப்போது வெறும் 100 டொலர்களுக்காக சிறைக்கு செல்கிறார் அந்த பெண்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்