பிரேசில் நாட்டில் சாலை முழுவதும் கொட்டிக்கிடக்கும் பணம்... ஆவலாக சேகரிக்கும் மக்கள்: பின்னணியில் ஒரு பகீர் சம்பவம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
613Shares

சமீபத்தில் பிரேசில் நாட்டில் சாலை முழுவதும் பணம் கொட்டிக்கிடக்க, அதை மக்கள் ஆவலுடன் சேகரிக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

ஆனால், அந்த வீடியோவின் பின்னணியில் ஒரு பகீர் சம்பவம் உள்ளது. பிரேசிலிலுள்ள Criciúma நகரில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், வங்கி ஒன்றிற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் சுமார் 30 பேர் இருக்கலாம் என்றும், பத்து கார்களில் அவர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆறு பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, தெருவில் துப்பாக்கிச்சூடும் நடத்தி ஏராளமான பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர் அந்த கொள்ளையர்கள்.

அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பொலிசார் உட்பட இருவர் சுடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது, அவர்களது தற்போதைய நிலைமை தெரியவில்லை.

தாங்கள் தப்பிச் செல்வதற்கு வசதியாக, அந்த கொள்ளையர்கள் கொஞ்சம் பணத்தை சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.

மக்கள் பணத்தை சேகரிக்கும் நேரத்தில் தப்பிச் செல்வது அவர்கள் திட்டம். இதற்கிடையில், பிரபலம் ஒருவர், இந்த சம்பவம் துயரமானதுதான், என்றாலும், இம்முறை பாவப்பட்ட பலருக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட பணம் கிடைத்திருக்கிறது என ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்