துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை: பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் என தகவல்

Report Print Kavitha in ஏனைய நாடுகள்
197Shares

பாகிஸ்தானில் பலாத்கார குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையாக ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது தொடர்பாக கொள்கை அடிப்படையில் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதன்போது பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக குற்றங்களை தடுப்பதற்கான அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அதில் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், அந்த வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை

மேலும் குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான் ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும், இது தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்